Posts

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

Image

முடிந்தவரை ஈமான், ஈமானிய எண்ணங்களுடன் வாழ்வதோடு, வியாபாரம் பிற தேவைகளிலும் குர்ஆன், ஹதீஸை பின் பற்றுங்கள்.

பிற சமுதாயத்தாரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவதே தொழுகை. (எனவே அத்)தொழுகையை முடிந்த வரை தங்களிடத்தே நிலை நிறுத்துங்கள்.

முடிந்தவரை ஈமான், ஈமானிய எண்ணங்களுடன் வாழ்வதோடு, வியாபாரம் பிற தேவைகளிலும் குர்ஆன், ஹதீஸை பின் பற்றுங்கள். 

தாங்கள் அறிந்துள்ள மார்க்க விஷயங்களை ஏதுமறியா, இறைச்சிந்தனையுள்ள முஸ்லிம் சமுதாயத்திடமும், ஏனைய பிற சமுதாயத்தாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் மேலும் மார்க்க மற்றும் பொது விஷயங்களை அறிந்து கொள்ள இது வழி வகுக்கும்.

நாம் ஒரு தூய முஸ்லிமாக வாழ்வதில் பெருமிதம் கொள்வதோடு, நம்மைப் பார்த்து மார்க்கத்தின்பால் மாற்றாரைக் கவர்ந்து அவர்களும் முஸ்லிமாக வாழ்ந்திட ஏவுபவராக இருங்கள்.

தான, தர்ம விஷயங்களிலும், ஜகாத் முறைப்படி கணக்கிட்டு வழங்குவதிலும், பெரியோரைப் பேணுதலிலும் அல்லாஹ்வை அஞ்சி நடங்கள். 

திருமண நெறி முறைகளை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியவாறு சிக்கனத் திருமண முறைகளைக் கையாளுங்கள். ஆண்கள் கைக்கூலி கேட்டுப் பெறுவதை அறவேத் துறந்து மணப்பெண்ணின் விருப்பமறிந்து மஹர் கொடுத்து திருமணம் செய்வதை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள். (இது நமக்கு நாமே கொண்டாடிக்…

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை

وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌‌ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَـاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏  மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். 16:61

அல்லாஹ்வின் அன்பு 70 தாய்களின் அன்புக்கு சமமானது என தாயின் அன்பையே உதாரணமாக கூறுகிறான் என்றால்.... சுபுஹானல்லாஹ்....சொல்ல வார்த்தைகளே இல்லை.....

ஒரு பெண் குழந்தை பிறப்பில் இருந்து மரணிக்கும்வரை தன் வாழ்வில் அவளை நன்முறையில் நடத்தவேண்டும் எனவும் ....
அவர்களுடன் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால்
அநீதம் இழைத்தால் அவன் அதை பற்றி கடுமையாக விசாரிக்கப்படுவான் என்று அச்சமூட்டி எச்சரித்த மார்க்கம் இஸ்லாம் தவிர வேறு ஏதும் உண்டா...???
பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என ஊடகங்களிலும்,
தினசரிகளிலும் அறியாதோர் ஆயிரம் கட்டுக்கதைகளும் எழுதினாலும்....
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அது ஒரு துளி அளவு கூட பாதிப்பை
ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.....!!!!மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.

அல் குர் ஆன் -46:15.

இப்படிப்பட்ட தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது .
நசயீ- 3104,அஹ்மத்15475.
என அண்ணலார் கூறியுள்ளார்கள்.


ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்;-

நான் கேட்டேன்:இறைவனின் தூதரே!!!பெண் மீது யாருக்கு
                                  அதிகமான உரிம…

நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(8:46)"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது.காட்டிக் கொடுக்கக் கூடாது.யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 2262, முஸ்லிம்ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராவர். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் …

"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.

"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.!" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு எல்லா ஷைத்தான்களையும், விஷஜந்துக்களையும், தீண்டக்கூடிய எல்லா கண்களையும் விட்டும் உங்கள் இருவருக்காக பாதுகாப்புத் தேடுகிறேன்.

நபி (ஸல்)அவர்கள் (தமது பேரர்களான) ஹஸன் (ரழி) ஹுஸைன் (ரழி) இருவருக்கும் பின் வருமாறு பதுகாப்பு துஆச்செய்து கொண்டிருந்தார்கள்.

பரிபூரணமான அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு எல்லா ஷைத்தான்களையும், விஷஜந்துக்களையும், தீண்டக்கூடிய எல்லா கண்களையும் விட்டும் உங்கள் இருவருக்காக பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வாறு அவர்கள் ஓதிவிட்டு அவ்விருவரையும் நோக்கி நிச்சயமாக உங்களுடைய (தந்தையாம் இப்றாஹீம்) அவர்கள் (தமது மக்களாகிய) இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோருக்கு இவ்வாறே பாதுகாப்பு துஆச் செய்து கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.(இப்னு அப்பாஸ் (ரழி) புகாரி)
துஆவை ஓதி சம்பந்தப்பட்டவர் மீது ஊதுவது:
நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் எவருக்கேனும் வியாதி ஏற்பட்டு விட்டால், குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதுவார்கள்.(ஆயிஷா (ரழி) முஸ்லிம்)
தாமே ஓதி தம்மீது ஊதிக் கொள்வதும், தமது கையினால் தடவிக்கொள்வதும்:
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிவிட்டால் குல்ஹு வல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் Fபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய ஸூராக்க…